Enable Javscript for better performance
5-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    5-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

    By DIN  |   Published on : 29th July 2018 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே 5-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், பள்ளித் தலைமை ஆசிரியர் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
    கலசப்பாக்கத்தை அடுத்த ஆதமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 5-ஆம் வகுப்பு பயிலும் ஒரு மாணவிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி, பாலியல் தொந்தரவு அளித்து வந்தாராம்.
    பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தாராம். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாணவியின் பெற்றோர், ஊர் பொதுமக்கள் சிலர் சென்று பள்ளியில் பணிபுரியும் மற்ற ஆசிரியர்களிடம் முறையிட்டனர். இதனால் அச்சமடைந்த தலைமை ஆசிரியர் சுப்பிரமணி தலைமறைவானார்.
    எனவே, கிராம மக்கள் திரண்டு பள்ளிக்கு சனிக்கிழமை பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தலைமை ஆசிரியர் சுப்பிரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். தகவலறிந்த கலசப்பாக்கம் போலீஸார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர்.
    பின்னர், பள்ளி வழக்கம்போலச் செயல்பட்டது. இந்த நிலையில், புகாருக்குள்ளான தலைமை ஆசிரியர் சுப்பிரமணியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai