Enable Javscript for better performance
ஆத்துரை காளியம்மன் கோயில் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சேத்துப்பட்டு வட்டம், ஆத்துரை காளியம்மன் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    ஆத்துரை ஊராட்சியில் பழைமை வாய்ந்த காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆடி மாத 2-ஆம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, கூழ்வார்த்தல், ஊரணி பொங்கல் வைத்தல் விழா நடைபெற்றது. தொடர்ந்து, சனிக்கிழமை 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அம்மன் தேரோட்டமும் நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக - ஆராதனைகள் நடைபெற்றன.
    இதையடுத்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் காளியம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து, வழிபாடுகள் நடத்தப்பட்டு, தேர் ஊர்வலம் வந்தது.
    விழாவில் ஆத்துரை, மூலபுரவடை, ஊத்தூரான்புரவடை, சித்தாத்துரை, தேவிகாபுரம், செய்யானந்தல், தச்சாம்பாடி உள்ளிட்ட சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai