Enable Javscript for better performance
காவல் நண்பர்கள் குழு நிர்வாகிக்கு விருது- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்ட காவல் நண்பர்கள் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளருக்கு சிறந்த மனித நேயச் செம்மல் விருது வழங்கப்பட்டது.
    திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் குடிமைப் பொருள் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு முகாம், காவல் நண்பர்கள் குழுவின் 25-ஆவது ஆண்டு வெள்ளி விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில், தமிழக அளவில் சிறப்பாக சமூகப் பணியாற்றிய பலருக்கு பல்வேறு விருதுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
    அந்த வகையில், தன்னலமற்ற சமூக சேவையைப் பாராட்டி திருவண்ணாமலை காவல் நண்பர்கள் குழுவின் மாவட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகத்துக்கு சிறந்த மனித நேயச் செம்மல் விருது,  சான்றிதழை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூடுதல் இயக்குநரும், காவல் நண்பர்கள் குழுவின் நிறுவனருமான பிரதிப் வி.பிலிப் வழங்கினார்.
    விழாவில், காவல் துறை உயர் அதிகாரிகள், பொதுமக்கள், சமூக சேவகர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai