Enable Javscript for better performance
கோயில்களில் தரிசன கட்டணத்தை நீக்கக் கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோயில்களில் தரிசன கட்டணத்தை நீக்கக் கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 30th July 2018 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோயில்களில் தரிசனக் கட்டணத்தை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து முன்னணியினர் சார்பில் திருவண்ணாமலை, வந்தவாசி, ஆரணி பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    திருவண்ணாமலை, அண்ணா சிலை எதிரே மாவட்ட இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வேலூர் கோட்டத் தலைவர் கோ.மகேஷ் தலைமை வகித்தார்.
    இந்து முன்னணியின் மாநிலப் பேச்சாளர் டி.எஸ்.சங்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    வந்தவாசியில்...: வந்தவாசி தேரடி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் நகரத் தலைவர் ஆர்.சீனுவாசன் தலைமை வகித்தார். வேலூர் மாநகர் மாவட்டச் செயலர் எஸ்.பாண்டியன், திருவண்ணாமலை மாவட்ட பொதுச் செயலர் டி.ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
    அமைப்பின் மாவட்டச் செயலர் ஆர்.சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.சீனுவாசன், சி.கண்ணதாசன், ஒன்றியத் தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஆரணியில்...: ஆரணி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் வேலூர் மாவட்டக் கோட்டப் பொறுப்பாளர் மகேஷ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணியின் ஆரணி நகரத் தலைவர் தாமோதரன், பாஜகவை சேர்ந்த மூர்த்தி, நாராயணன், விஜயகுமார், கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai