Enable Javscript for better performance
சென்னியம்மன் கோயிலில் ஆடிப் பெருக்கு விழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    சென்னியம்மன் கோயிலில் ஆடிப் பெருக்கு விழா கொடியேற்றம்

    By DIN  |   Published on : 30th July 2018 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கம் அருகே நீப்பத்துறை சென்னியம்மன் கோயில் ஆடிப் பெருக்கு விழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    செங்கத்தை  அடுத்த நீப்பத்துறையில் அலமேலு மங்கை பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் சென்னியம்மன் மற்றும் ஆளுடையான் தேவஸ்தான கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 73-ஆம் ஆண்டு ஆடிப் பெருக்கு விழா கோடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
    இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து, தினமும் இரவு சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா, திருக்கல்யாண நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும்.
    தொடர்ந்து, ஆகஸ்ட் 3-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆடிப் பெருக்கு விழா நடைபெறும். விழாவில் பல்வேறு ஊர்கள், மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து அங்குள்ள சென்னியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவர். பின்னர், தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடுவர்.
    விழாவையொட்டி, சேலம், தருமபுரி, அரூர், ஊத்தங்கரை, திருவண்ணாலை, செங்கம் ஆகிய பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai