Enable Javscript for better performance
திருவண்ணாமலை மகா தீப மலையில் 2 நாள்களாக தவித்த ரஷிய சுற்றுலாப் பயணி மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மகா தீப மலையில் 2 நாள்களாக தவித்த ரஷிய சுற்றுலாப் பயணி மீட்பு

    By DIN  |   Published on : 30th July 2018 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயர மலையில் இருந்து கீழே இறங்க வழி தெரியாமல் 2 நாள்களாகச் சிக்கித் தவித்த ரஷிய நாட்டின் சுற்றுலாப் பயணியை ஞாயிற்றுக்கிழமை மீட்புக் குழுவினர் மீட்டனர்.
    ரஷிய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி அலெக்ஸாண்டர். இவர், சனிக்கிழமை காலை திருவண்ணாமலையில் உள்ள மகா தீபம் ஏற்றும் மலை உச்சிக்குத் தனியே சென்றாராம். அங்கிருந்த அருணாசலேஸ்வரரை வழிபட்டுவிட்டு, மீண்டும் மலையில் இருந்து கீழே இறங்க முயன்றுள்ளார். அப்போது, சரியான வழி தெரியாததால் அவதிப்பட்டாராம்.
    பின்னர், திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தை 100 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உதவி கேட்டார்.
    இதையடுத்து, காவல் துறை மற்றும் வனத்துறை ஊழியர்கள் சனிக்கிழமை மலைக்குச் சென்று அலெக்ஸாண்டரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. அவரது செல்லிடப்பேசியும் அணைப்பில் கிடந்தது. இதனால், தேடுதல் பணியில் ஈடுபட்டவர்கள் கீழே வந்துவிட்டனர்.
    2-வது நாளாக தேடுதல் வேட்டை: இந்த நிலையில், 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் அலெக்ஸாண்டரை தேடும் பணி தொடர்ந்தது. மாலை 3 மணிக்கு மலையின் வடக்குப் பகுதியில் கீழே இறங்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த அவரை மீட்டனர்.
    பின்னர், திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி எதிரே உள்ள பூங்கா வழியாக அவரை நகருக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai