Enable Javscript for better performance
தூசி கிராமத்தில் துணை சுகாதார நிலையம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறை அடுத்த தூசி கிராமத்தில் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய துணை சுகாதார நிலையத்தை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். 
    நிகழ்ச்சியில் செய்யாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தூசி கே.மோகன், ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி சேவல் வி.ஏழுமலை, செய்யாறு சுகாதார மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் வி.கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெருங்கட்டூர் வட்டார மருத்துவர் வி.என்.பத்மபிரியா வரவேற்றார்.
    நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பேசியதாவது: 
    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 91 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 10 அரசு மருத்துவமனைகளில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் புறநோயாளிகளாகவும், 65 ஆயிரம் பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சைப் பெறுகின்றனர். குழந்தைப் பிறப்பின் போது குழந்தை, தாய் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது. கர்ப்பிணிகள் மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன் பெறுவது, பிறப்புச் சான்றிதழ் பெறுவது ஆகியவற்றில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடம் வகிக்கிறது என்றார் அவர்.
    விழாவில் சுகாதாரப் பணியாளர்கள், உள்ளாட்சி முன்னாள் பிரதிநிதிகள், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai