Enable Javscript for better performance
தொட்டில் குழந்தை திட்டத்தில் பெண் குழந்தை சேர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி அருகே எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விட்டுச் செல்லப்பட்ட பெண் குழந்தை ஞாயிற்றுக்கிழமை தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது.
    ஆரணி பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத பெண்ணுக்கு கடந்த 7 நாள்களுக்கு முன்பு அடுக்கம்பாறை அரசு  மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததாகக் கூறப்படுகிறது. அந்த குழந்தையை அவர், ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விட்டுச் சென்றதாகத் தெரிகிறது.
    இதைப் பார்த்த எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் அந்த பெண் குழந்தையைப் பாதுகாத்து ஆரணி அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். 
    இதைத் தொடர்ந்து, ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போலீஸாரின் உதவியுடன் திருவண்ணாமலை தொட்டில் குழந்தைத் திட்டத்தில் அந்த பெண் குழந்தையைச் சேர்த்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai