Enable Javscript for better performance
நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு

    By DIN  |   Published on : 30th July 2018 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறு தொகுதியைச் சேர்ந்த அனக்காவூர், வெம்பாக்கம், செய்யாறு ஆகிய ஒன்றியங்களிலும், செய்யாறு நகரத்திலும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
    திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் செய்யாறு தொகுதிக்கான கூட்டம் செய்யாறு ஒன்றியத்தில் உள்ள தனியார் மண்டபத்திலும், செய்யாறு நகரத்துக்கான கூட்டம் மற்றொரு தனியார் மண்டபத்திலும், அனக்காவூர் ஒன்றித்தில் மேல்மா கூட்டுச் சாலையில் உள்ள தனியார் மண்டபத்திலும், வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியத்தில், அப்துல்லாபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்திலும், வெம்பாக்கம் மேற்கு ஒன்றியத்தில் அசனமாப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்திலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
    இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்கு கழக அமைப்புச் செயலர் முக்கூர் என்.சுப்பிரமணியன், ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி சேவல் 
    வே.ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    கூட்டத்தில் சிறப்பாளராகப் பங்கேற்ற தமிழக இந்து சமய அறநியைத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் சிறப்பாகப் பணியாற்றுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கிப் பேசினார்.
    நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலரும், செய்யாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான தூசி கே.மோகன் சிறப்புரையாற்றினார்.
    கூட்டத்தில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஜெமினி ராமசந்திரன், எம்.விமலா மகேந்திரன், என்.ரமணி நீலமேகம், டி.கருணாகரன், கட்சி நிர்வாகிகள் பி.கே.நாகப்பன், எஸ்.கிருஷ்ணன், ஏ.ஜனார்த்தனம், வி.குணசீலன், எம்.மகேந்திரன், கே.வெங்கடேசன், என்.ரகு, கார்த்திகேயன், எஸ்.திருமூலன், ஏ.அருணகிரி, சுரேஷ் நாராணயனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai