Enable Javscript for better performance
நூல் வெளியீட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    வேட்டவலத்தில் "என்னைத் தேடி' என்ற நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    திருவண்ணாமலை கண்ணதாசன் இலக்கியப் பேரவை, திருவண்ணாமலை நந்தினி பதிப்பகம் இணைந்து நடத்திய விழாவுக்கு ந.சுப்பிரமணிய பாரதியார் தலைமை வகித்தார். சி.அ.முருகன், வி.ரகுபதி, ப.முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை எஸ்.தேவிகாராணி வரவேற்றார்.
    துபாய் எழுத்தாளர் நசீமா ரசாக் எழுதிய "என்னைத் தேடி' நூலை திரைப்படத் தயாரிப்பாளரும், தொழிலதிபருமான ஆ.சந்திரசேகர் வெளியிட, முன்னாள் எம்.எல்.ஏ. பி.எஸ்.விஜயகுமார், கவிஞர்கள் மு.பிரசன்னா, பாரதி சுகுமாறன், ச.செந்தில்வேலன், எஸ்.எஸ்.இஸ்மாயில் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
    கவியரசு கண்ணதாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கண்ணதாசன் படத்தைத் திறந்து வைத்துப் பேசினார். தொடர்ந்து, பேராசிரியர் எஸ்.எஸ்.இஸ்மாயில் தலைமையில் பாட்டு மன்றம் நடைபெற்றது.
    மேலும், பல்வேறு பள்ளிகளில் நடைபெற்ற கட்டுரைப் போட்டிகளில் வென்ற மாணவ - மாணவிகளுக்கு ஜெயந்தி கண்ணப்பன் பரிசுகளை வழங்கினார். நூல் ஆசிரியர் நசீமா ரசாக் ஏற்புரையாற்றினார்.
    முன்னதாக, ப.நந்தினியின் பரத நாட்டியம் நடைபெற்றது. இதில், எழுத்தாளர் உமாதேவி பலராமன், நந்தினி பதிப்பகம் ந.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai