Enable Javscript for better performance
பசுமை வழிச் சாலைக்கு நிலம் அளவீடு: விவசாயி விஷம்  குடித்து தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    பசுமை வழிச் சாலைக்கு நிலம் அளவீடு: விவசாயி விஷம்  குடித்து தற்கொலை

    By DIN  |   Published on : 30th July 2018 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கம் அருகே பசுமை வழிச்சாலைக்கு நிலத்தை அளந்து கற்களை நட்டதால், விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சேகர் (45). இவருக்குச் சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலம் சென்னை - சேலம் இடையே அமைக்கப்பட உள்ள பசுமை வழிச் சாலைக்காக சில தினங்களுக்கு முன்பு அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டதாம்.
    இதனால், மனமுடைந்து காணப்பட்ட சேகர் ஞாயிற்றுக்கிழமை பூச்சி மருந்து குடித்து அவருடைய நிலத்தில் மயங்கி விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது. 
    இதுகுறித்து மேல்செங்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai