Enable Javscript for better performance
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வேட்டவலம் அரசு ஆண்கள்  மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
    திருவண்ணாமலை ரோட்டரி கிளப் லைட் சிட்டி அமைப்பு சார்பில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சாமிக்கண்ணு தலைமை வகித்தார். ரோட்டரி கிளப் லைட் சிட்டி தலைவர் காயத்ரி, செயலர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    மாவட்டத் தலைவர் அன்பரசு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினர்.
    தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
    விழாவில், ரோட்டரி கிளப் லைட் சிட்டி பொருளாளர் செல்வி, பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் கருணாகரன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai