Enable Javscript for better performance
மக்களின் ஆதரவு இல்லாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது: இரா.முத்தரசன்- Dinamani

சுடச்சுட

    

    மக்களின் ஆதரவு இல்லாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது: இரா.முத்தரசன்

    By DIN  |   Published on : 30th July 2018 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களின் ஆதரவு இல்லாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் கூறினார்.
    திருவண்ணாமலையில் "8 வழி பசுமைச் சாலை மக்களுக்கானதா?' என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. 
    கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் முத்தையன் தலைமை வகித்தார். பசுமைச் சாலை எதிர்ப்பு இயக்கக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.அபிராமன் வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது: 
    சேலம் - சென்னை இடையிலான பசுமைச் சாலைத் திட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. பாஜக, அதிமுக மட்டும்தான் ஆதரவு தெரிவிக்கின்றன.
    நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்கு விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டபோது நிலத்துக்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதுவரை, வேலை வழங்கவில்லை. வேலை வழங்கக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    8 வழிச் சாலையால் யாருக்கு வளர்ச்சி என்று கேட்டால், எங்களை தேச விரோதிகள் என்கிறார்கள். இந்திய சுதந்திரத்துக்கும், தேச வளர்ச்சிக்கும் காரணமான கம்யூனிஸ்டுகளை நிராகரித்துவிட்டு, சரித்திரத்தை எழுத முடியாது.
    நிலத்துக்காக வழங்கப்படும் பணம், விரைவில் செலவாகி விடும். நிலத்தை இழந்த விவசாயிகள் தெருவில் நிற்கும் நிலை ஏற்படும். 20 சதவீத கமிஷன் கிடைக்கும் என்பதற்காகவே இந்தச் சாலை அமைக்கப்படுவதாக சந்தேகம் எழுகிறது. மக்கள் போராட்டங்களுக்கு எதிராக அரசு எதிர் கருத்துத் தெரிவிக்கலாம். மாறாக, அடக்குமுறை மூலம் வெற்றி பெற முடியாது என்பதை மத்திய - மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் ஆதரவு இல்லாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது என்றார் அவர்.
    கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் என்.பாண்டி, மாநில மதிமுக துணைப் பொதுச் செயலர் ஏ.கே.மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் பி.கா.அம்பேத்வளவன், மக்கள் ஜனநாயக குடியரசுக் கட்சியின் பொதுச் செயலர் பழனி, 8 வழி பசுமைச் சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளர் இல.அழகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai