Enable Javscript for better performance
முனீஸ்வரன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை ஸ்ரீமுனீஸ்வரன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
    திருவண்ணாமலை கிரிவலப் பாதை, கோசாலை கிராமத்தில் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீமுனீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் அந்தப் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குல தெய்வமாக விளங்கி வருகிறது. இங்கு ஆடி மாதத்தையொட்டி, திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர். 
    அதன்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக - ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், பல நூறு பெண்கள் திரண்டு பொங்கல் வைத்தனர். பலர் தங்களது 
    குழந்தைகளுக்கு மொட்டை அடித்தும், காது குத்தியும், ஆடு, கோழிகளை பலியிட்டும் நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா கோசாலை ஜெ.வேலு மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai