Enable Javscript for better performance
அரசு கல்லூரி கலந்தாய்வு ஆக. 31-க்கு மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 31) நடைபெறவிருந்த மாணவர் சேர்க்கை இறுதிக் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
     இதுகுறித்து கல்லூரி முதல்வர் க.எழிலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2018 - 19 ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை, முதுநிலைப் பாடப் பிரிவுகளுக்கு இறுதிக் கட்ட கலந்தாய்வு செவ்வாய்கிழமை (ஜூலை 31) நடைபெறுவதாக இருந்தது.
     இந்த நிலையில், திருவள்ளுவர் பல்கலை. பதிவாளர் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் இறுதிக் கட்ட கலந்தாய்வை ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடத்த அறிவுறுத்தியுள்ளார்.
     அதன்படி, செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) பாடப் பிரிவுகளுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெறும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai