Enable Javscript for better performance
ஆசிரியர்கள் குறைகளைத் தெரிவிக்க செல்லிடப்பேசி எண் அறிமுகம்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர்கள் குறைகளைத் தெரிவிக்க செல்லிடப்பேசி எண் அறிமுகம்

    By திருவண்ணாமலை  |   Published on : 31st July 2018 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களின் குறைகள், கோரிக்கைகளைத் தெரிவிக்க செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
    திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணி வரன்முறை, தகுதிகாண் பருவம், சிறப்பு நிலை, தேர்வு நிலை, பணப் பலன்கள் பெற்றுத் தருதல் ஆகியவற்றில் உள்ள குறைகளைத் தீர்க்க கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து சார்நிலை அலுவலர்களும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
    எனவே, 2018 ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் தங்களின் குறைகளைத் தெரிவிக்க ஏதுவாக tvmteachersgrievance@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல் முகவரியில் குறைகளைத் தெரிவித்தால் ஒரு வாரத்துக்குள் குறைகள், கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்கும். மேலும், ஆசிரியர்கள் தங்களது குறைகளை 87542 52452 என்ற செல்லிடப்பேசி எண்ணில் குறுஞ்செய்தி, கட்செவி அஞ்சல் தகவலாகவும் அனுப்பலாம்.
    இந்தத் தகவலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai