Enable Javscript for better performance
ஆடிப் பெருக்கு: தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்துவிடக் கோரி மனு- Dinamani

சுடச்சுட

    

    ஆடிப் பெருக்கு: தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்துவிடக் கோரி மனு

    By  செங்கம்,  |   Published on : 31st July 2018 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆடிப் பெருக்கு விழாவில் பக்தர்கள் புனித நீராடும் வகையில், செங்கம் அருகே செல்லும் தென்பெண்ணை ஆற்றில் கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.
     இதுகுறித்து, நீப்பத்துறை சென்னியம்மன் கோயில் அறங்காவலர்கள் குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
     செங்கத்தை அடுத்த நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றங்கரையில் சென்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆடி மாதம் 18-ஆம் தேதி (ஆகஸ்ட் 3) ஆடிப் பெருக்கு விழா நடைபெறும். அப்போது, பல்லாயிரக் கணக்கானோர் ஆற்றில் புனித நீராடுவது வழக்கம்.
     இந்த நிலையில், தற்போது ஆற்றில் தண்ணீர் இல்லாததால், ஆடிப் பெருக்கு விழாவில் பக்தர்கள் புனித நீராட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கிருஷ்ணகிரி அணையில் இருந்து ஆடிப் பெருக்கு விழாவுக்கு தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai