Enable Javscript for better performance
ஆரணி முத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா: அமைச்சர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி முத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா: அமைச்சர் பங்கேற்பு

    By  ஆரணி,  |   Published on : 31st July 2018 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணி பள்ளிக்கூடத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில், அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று அம்மனை வழிபட்டார்.
     இந்தக் கோயிலில் நடைபெற்ற ஆடித் திருவிழாவை முன்னிட்டு, கமண்டல நாக நதியிலிருந்து கக்தி கிரகம் கொண்டு வரப்பட்டு, சன்னதியில் வைக்கப்பட்டது. பின்னர், கூழ்வார்த்தல், பக்தர்கள் தங்களது உடலில் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
     தொடர்ந்து, இரவு புஷ்பப் பல்லக்கில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி உலா வந்தார். விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தலைவர் அ.கோவிந்தராசன் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai