Enable Javscript for better performance
கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி இண்டர்நேஷனல் கல்வியியல் பெண்கள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
     விழாவுக்கு கல்லூரித் தாளாளர் பி.ஜாகிர் உசேன் தலைமை வகித்தார். விழாவில், மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எபிடி.பாதுஷாஸ் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார். நிகழ்ச்சியில் 100 மாணவிகளுக்கு பட்டம் பெற்றனர்.
     விழாவில் நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் சி.செந்தில் கணேஷ், எஸ்.ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றுகளை வழங்கினர்.
     முன்னதாக, கல்லூரி நிர்வாகக் குழுத் துணைத் தலைவர் ஜெ.குலாம்நபி ஆசாத் வரவேற்றார். விழாவில் நிர்வாக குழுத் தலைவர் எஸ்.அப்துல்பக்ஷி, நிர்வாக குழு உறுப்பினர் எச்.இஸ்மாயில்ஷரீப், ஆரணி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் எ.தஸ்தகீர், செயலர் திரிலோகசுந்தரமூர்த்தி, கல்லூரி முதல்வர் ஜெ.மஹபூப்பீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai