Enable Javscript for better performance
குறும்படம் திரையிடல் விழா- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் வந்தவாசி கிளை சார்பில் வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் அண்மையில் நடைபெற்ற திண்ணை இலக்கிய நிகழ்ச்சியையொட்டி குறும்படம் திரையிடப்பட்டது.
     நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் எ.பூங்காவனம் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற ஆசிரியர் டி.சீனிவாசன், வந்தவாசி ராமலிங்கம் அண்ட் கோ உரிமையாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் பூ.சேகர் வரவேற்றார். விழாவில் மாநிலத் துணைப் பொதுச் செயலர் எஸ்.கருணா இயக்கிய "ஏழுமலை ஜமா' என்ற குறும்படம் திரையிடப்பட்டது. பின்னர், குறும்பட இயக்க அனுபவங்கள் குறித்து எஸ்.கருணா பேசினார். தொடர்ந்து நடைபெற்ற கவியரங்கில் கவி பாடிய தென்னாங்கூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.
     ரஜினி குழுவினரின் மண்ணிசை கச்சேரியும், பெரியசாமி குழுவினரின் சிலம்பாட்டக் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
     விழாவில் மாவட்ட தமுஎகச தலைவர் கவிஞர் ஆரிசன், வந்தவாசி கிளைத் தலைவர் எஸ்.ரவி, செயலர் உ.பிரபாகரன், பொருளாளர் முனைவர் ம.மகாலட்சுமி மற்றும் சாத்தமங்கலம் அண்ணாமலை, பூங்குயில் சிவகுமார், ஜி.அஸ்கர்அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai