Enable Javscript for better performance
சதுரங்கப் போட்டியில் வென்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    சதுரங்கப் போட்டியில் வென்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

    By  திருவண்ணாமலை,  |   Published on : 31st July 2018 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை வட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்ற எஸ்.ஆர்.ஜி.டி.எஸ். பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
     திருவண்ணாமலை வட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சதுரங்கப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. வேட்டவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
     திருவண்ணாமலை எஸ்.ஆர்.ஜி.டி.எஸ். பள்ளி சார்பில் கலந்து கொண்ட லட்சுமி நாராயணன், கிஷோர்குமார், சுஜிதா ஆகியோர் முதலிடமும், இலக்கியா, ஞானசேகர் ஆகியோர் இரண்டாமிடமும், புஷ்பா, கோகுலீஸ்வர் ஆகியோர் மூன்றாம் இடமும் பிடித்தனர்.
     போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர் டி.அரவிந்குமார், பள்ளித் தலைவர் டி.தர்மிசந்த் ஜெயின், செயலர் டி.சுப்பராயன், பொருளாளர் எஸ்.விஜயகுமார், துணைத் தலைவர் ஆர்.கலாவதி ராஜமாணிக்கம், இணைச் செயலர் எஸ்.பிரபாகரன், நிர்வாக உறுப்பினர் எஸ்.செந்தில்நாதன், முதல்வர் கே.வி.ஜெகதீஸ்வரி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai