Enable Javscript for better performance
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு- Dinamani

சுடச்சுட

    

    போளூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 6-ஆவது மாவட்ட மாநாடு, புதிய நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
     கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் சி.நாராயணசாமி வரவேற்றார். மாவட்ட நிர்வாகக் குழு ம.சுப்பிரமணியன் மாநாட்டுக் கொடியேற்றி வைத்தார்.
     இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் வே.முத்தையன் மாநாட்டைத் தொடக்கிவைத்தார். மாவட்டச் செயலர் ப.தி.ராசேந்திரன் மாநாட்டு அறிக்கையை வாசித்தார். மாநில நிர்வாகக் குழுவைச் சேர்ந்த இரா.முல்லை, மாவட்ட நிர்வாகக் குழுவைச் சேர்ந்த கு.ஜோதி, மாவட்டச் செயலர் எம்.எஸ்.மாதேஸ்வரன், பொதுச் செயலர் த.ராசேந்திரன், வட்டச் செயலர் இரா.ருத்திராச்சாரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
     கூட்டத்தில் 8 வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வருகிற ஆகஸ்ட் 6-ஆம் தேதி திருவண்ணாமலையில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்பது, திருவண்ணாமலை மாவட்டத்தை இயற்கை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், மாவட்டத் தலைவராக எஸ்.திருஞானம், செயலராக சி.நாராயணசாமி, துணைத் தலைவராக எம்.சுப்பிரமணியன், துணைச் செயலராக பி.நம்பிராஜன், பொருளாளராக கே.துரைசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai