தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
By வந்தவாசி, | Published on : 31st July 2018 08:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் இருளர் இன மாணவரை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை மங்கவரதாள், ஆசிரியர் பாண்டுரங்கன் ஆகியோர் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் இரா.சரவணன் தலைமை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பாண்டு, மாவட்டச் செயலர் எம்.சிவக்குமார், வட்டச் செயலர் வே.சிவராமன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலர் ப.செல்வன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் சி.குமார், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பெ.அரிதாசு, நா.ராதாகிருஷ்ணன், சிறுபான்மை நலக் குழு உறுப்பினர் எ.அப்துல் காதர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதிச் செயலர் மேத்தா ரமேஷ் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.