Enable Javscript for better performance
திருவண்ணாமலை தாமரைக் குளத்தில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்யக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை தாமரைக் குளத்தில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்யக் கோரிக்கை

    By  திருவண்ணாமலை,  |   Published on : 31st July 2018 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை தாமரைக் குளத்தில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்தது.
     திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வந்த இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலர் கொல்லிடம் ஜெ.சுவாமிநாதன், மாவட்டத் தலைவர் இர.விஜயராஜ், செயலர் ஜெ.அசோக்குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
     திருவண்ணாமலை தாமரைக் குளத்தை அழகுபடுத்தி, படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். குளத்தை சுற்றிலும் படிக்கட்டுகள், சுற்றுச் சுவரைக் கட்டி பூங்கா அமைக்க வேண்டும். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு மாவட்டம் வாரியாக 10 ஆயிரம் பேருக்கு பயணச் செலவாக ரூ. 2 ஆயிரத்தை அரசு மானியத் தொகையாக வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்து. மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai