Enable Javscript for better performance
பொதுமக்கள் குறைதீர் கூட்டம்: 441 மனுக்கள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பொதுமக்கள் குறைதீர் கூட்டம்: 441 மனுக்கள் அளிப்பு

    By  திருவண்ணாமலை,  |   Published on : 31st July 2018 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 441 மனுக்கள் வரப் பெற்றன.
     கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி முதியோர், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 441 மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
     இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
     மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
     நலத் திட்ட உதவிகள் அளிப்பு: கூட்டத்தில், வந்தவாசி வட்டம், பழவேரி கிராமம் முனுசாமி மகன் சிவா, நூக்காம்பாடி கிராமம் சுந்தர் மனைவி கம்சலா, தண்டராம்பட்டு வட்டம், அகரம்பள்ளிப்பட்டு கிராமம் சுப்பராயன் மகன் ராமு ஆகியோருக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
     கூட்டத்தில் உதவி ஆட்சியர் எம்.பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் உமா மகேஸ்வரி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சு.சரவணன் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai