Enable Javscript for better performance
வந்தவாசியில் வைஷ்ணவ மாநாடு- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி ஸ்ரீமந் நாதமுனி ஸ்வாமிகள் ஸ்ரீவைஷ்ணவ சபை சார்பில் 33-ஆம் ஆண்டு ஸ்ரீவைஷ்ணவ மாநாடு வந்தவாசி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     இதையொட்டி, ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற மாநாட்டுக்கு வந்தவாசி ஸ்ரீமந் நாதமுனி ஸ்வாமிகள் ஸ்ரீவைஷ்ணவ சபைத் தலைவர் என்.புருஷோத்தமன் தலைமை வகித்தார். முதன்மைச் செயலர் கே.மணிவண்ணன் முன்னிலை வகித்தார். செயலர் இராம.ஸ்ரீனிவாசன் வரவேற்றார்.
     "பார்த்தனுக்கு தேரோட்டிய பெருமாள்' என்ற தலைப்பில் அரவிந்த லோசனன் ஸ்வாமிகளும், "தமிழும் எம்பெருமானாரும்' என்ற தலைப்பில் ஆசூரி சுதா அம்மங்காரும், "ஸ்ரீவைணவத்தின் ஏற்றம்' என்ற தலைப்பில் இரா.வ.கமலக்கண்ணனும், "மதுரகவியும் மாலவன் கவியும்' என்ற தலைப்பில் டி.ஆராவமுதனும், "உயர்வற உயர்நலம் உடையவன்' என்ற தலைப்பில் ரகுவீர பட்டாச்சாரியார் ஸ்வாமிகளும் சிறப்புரையாற்றினர். மாம்பட்டு பெ.பார்த்திபன் தலைமையில் பஜனைக் குழுவினரின் ஊர்வலம் நடைபெற்றது. வந்தவாசி கோட்டை ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலிலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் பஜார் வீதி, தேரடி வழியாக ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலைச் சென்றடைந்தது.
     மாநாட்டில் ஓய்வு பெற்ற சுகாதாரத் துறை இணை இயக்குநர் எஸ்.குமார், ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் ஜி.சுகுமாரன், வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai