Enable Javscript for better performance
அதிமுக அமைப்புச் செயலராக நியமிக்கப்பட்ட அமைச்சருக்கு வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக அமைப்புச் செயலராக நியமிக்கப்பட்ட அமைச்சருக்கு வரவேற்பு

    By DIN  |   Published on : 24th March 2018 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுக அமைப்புச் செயலராக நியமிக்கப்பட்ட அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனுக்கு ஆரணியில் அந்தக் கட்சியினர் வெள்ளிக்கிழமை உற்சாகமான வரவேற்பளித்தனர்.
    அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் அதிமுக அமைப்புச் செயலராக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனை நியமித்தனர்.
    இந்த நிலையில், அமைப்புச் செயலர் பொறுப்பேற்ற பின்னர் வெள்ளிக்கிழமை தனது தொகுதியான ஆரணிக்கு வந்த அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனுக்கு அந்தக் கட்சியினர் உற்சாகமான வரவேற்பளித்தனர். இதையொட்டி, வழிநெடுகிலும் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.
    தொடர்ந்து, ஜெயலலிதா, எம்ஜிஆர் உருவப் படங்களுக்கு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மாலை அணிவித்து, மரியாதை செய்தார். மேலும், ஆரணியில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், அம்பேத்கர் சிலைகளுக்கும் கட்சியினருடன் ஊர்வலமாகச் சென்று அமைச்சர் மாலை அணிவித்தார்.
    நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச் செயலர் முக்கூர் என்.சுப்பிரமணியன், செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், மகளிரணி துணைச் செயலர் எல்.ஜெயசுதா, மாவட்ட அவைத் தலைவர் ஜெமினி ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் க.சங்கர், பேரவை நிர்வாகி பாரி பி.பாபு, நகரச் செயலர் எ.அசோக்குமார், ஒன்றியச் செயலர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, பச்சையப்பன், பாசறை மாவட்டச் செயலர் கஜேந்திரன், எம்ஜிஆர் மன்ற நிர்வாகி அ.கோவிந்தராசன், மாவட்ட மகளிரணிச் செயலர் குமுதவள்ளி
    உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai