Enable Javscript for better performance
அம்மா திட்ட முகாம்: 125 பேருக்கு நலத் திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    செங்கம், போளூர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 125 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    செங்கத்தை அடுத்த மேல்ராவந்தவாடி, இராமாபுரம், நரடாப்பட்டு ஆகிய கிராமங்களுக்கான அம்மா திட்ட முகாம் மேல்ராவந்தவாடி கிராமத்தில் நடைபெற்றது.
    முகாமில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 150 பேர் கலந்துகொண்டு சிறு, குறு விவசாயிச் சான்று, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை உள்பட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கக் கோரி மனுக்களை அளித்தனர்.
    மனுக்களை பரிசீலனை செய்த வருவாய்த் துறையினர், 110 மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வட்டாட்சியர் உதயகுமார் வழங்கினார்.
    நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் அருண்பிரசாந்த் வரவேற்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், முன்னாள் தலைவர் செந்தில்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் மல்ரெட்டியார், குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    போளூர்: போளூரை அடுத்த புலிவானந்தல் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வட்டாட்சியர் பாலாஜி தலைமை வகித்து, பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கக் கோரி பொதுமக்கள் அளித்த 49 மனுக்களைப் பெற்றார். பின்னர், 15 பேருக்கு நலத் திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
    முகாமில் சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர் சஜேஷ்பாபு, வட்ட வழங்கல் அலுவலர் சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் தெய்வநாயகி வரவேற்றார்.
    மண்டல துணை வட்டாட்சியர் மஞ்சுளா, கிராம நிர்வாக அலுவலர்கள் கீதாமணி, செந்தில், சுகந்தி, ராமச்சந்திரன், வனிதா, சங்கர் மற்றும் கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai