Enable Javscript for better performance
ஏப். 5-இல் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஏப். 5-இல் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

    By DIN  |   Published on : 24th March 2018 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டமும், முன்னாள் படை வீரர்களுக்கான சுய வேலைவாய்ப்பு கருத்தரங்கமும் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெறுகின்றன.
    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல் 5-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகிக்கிறார். முப்படை வீரர் வாரிய துணைத் தலைவர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், பல்வேறு வங்கிகளின் மேலாளர்கள், மாவட்ட தொழில் மைய அலுவலர், தாட்கோ மேலாளர், மாவட்ட தொழில் முதலீட்டுக் கழகம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டு முன்னாள் படை வீரர்களுக்கான சுய வேலைவாய்ப்பு கடனுதவித் திட்டங்கள், மறு வேலைவாய்ப்பு பயிற்சிகள் குறித்து விளக்கம் அளிக்கின்றனர்.
    இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai