Enable Javscript for better performance
காயங்களுடன் மீட்கப்பட்ட அரியவகை ஆந்தை- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் காயங்களுடன் மீட்கப்பட்ட வெளிநாட்டு அரியவகை ஆந்தைக்கு வனத் துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    வந்தவாசியில் திண்டிவனம் சாலை - கெஜலட்சுமி நகர் சந்திப்பு பகுதியில் உள்ள மரத்தடியில் வெள்ளிக்கிழமை காலை வெளிநாட்டு அரியவகை ஆந்தை ஒன்று காயமடைந்த நிலையில் பறக்க முடியாமல் கிடந்தது. இதனைக் கண்ட அந்தப் பகுதி பொதுமக்கள், இது குறித்து வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
    இதையடுத்து, அங்கு சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பிரபாகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்களிடம் அந்த ஆந்தையை பொதுமக்கள் ஒப்படைத்தனர். பின்னர், தீயணைப்புத் துறையினர் அந்த ஆந்தையை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
    இந்த ஆந்தை ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த அரியவகை ஆந்தையாக இருக்கலாம் என்றும், உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வனப் பகுதியில் விடப்படும் என்றும் வனத் துறையினர் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai