Enable Javscript for better performance
செய்யாறில் தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை செலுத்திய அதிமுக நிர்வாகிகள்- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறில் தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை செலுத்திய அதிமுக நிர்வாகிகள்

    By DIN  |   Published on : 24th March 2018 02:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுக சார்பில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் அமைப்புச் செயலர்கள், மகளிரணி துணைச் செயலர் நியமனம் செய்யப்பட்ட நிலையில், செய்யாறில் அந்தக் கட்சியினர் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தி, தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் அமைப்புச் செயலர்களாகவும், போளூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஜெயசுதா மகளிரணி துணைச் செயலராகவும் அதிமுக சார்பில் அண்மையில் நியமிக்கப்பட்டனர்.
    இந்த நிலையில், அமைப்புச் செயலர்கள், மகளிரணி துணைச் செயலர் நியமிக்கப்பட்டதை முன்னிட்டு, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரணி நடைபெற்றுது.
    பேரணிக்கு முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலரும், செய்யாறு தொகுதி எம்எல்ஏவுமான தூசி கே.மோகன் தலைமை வகித்தார்.
    இதில், சிறப்பாளராக பங்கேற்ற அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அரசு மருத்துவமனை அருகேயுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பேரணியை தொடக்கி வைத்தார். தொடர்ந்து, அம்பேத்கர் சிலைக்கும், ஆரணி கூட்டுச் சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவித்தனர்.
    முன்னதாக, எம்ஜிஆர் சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்டச் செயலர் தூசி கே.மோகன் ஆகியோர் முன்னிலையில் அதிமுகவினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
    நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஏ.ஜனார்த்தனம், எஸ்.கிருஷ்ணன், வே.குணசீலன், பி.கே.நாகப்பன், கே.வெங்கடேசன், எம்.மகேந்திரன், ஏ.அரங்கநாதன், ஜி.வரதன், சி.துரை, விமலாமகேந்திரன், டி.பி.துரை, ஏ.அருணகிரி, எஸ்.ரவிச்சந்திரன், ஆர்.கே.மெய்யப்பன், ஜி.கோபால், டி.சி.கங்காதரன், பி.லோகநாதன், கோவிந்தராஜ், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai