Enable Javscript for better performance
மார்ச் 28-இல் மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    மார்ச் 28-இல் மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்

    By DIN  |   Published on : 24th March 2018 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் வரும் 28-ஆம் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, மார்ச் மாதத்துக்கான தடகளம், நீச்சல், கபடி, கையுந்துபந்து போட்டிகள் வரும் 28-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் காலை 8.30 மணிக்கு தொடங்குகின்றன.
    இந்தப் போட்டிகளில் வயது வரம்பின்றி அனைத்துப் பிரிவினரும் கலந்து கொள்ளலாம். ஒரு பள்ளி, கல்லூரியில் இருந்து குழு விளையாட்டுப் போட்டியான கபடி, கையுந்துபந்து போட்டிகளுக்கு ஒரு மாணவர் அணி, ஒரு மாணவிகள் அணி மட்டும் விளையாட அனுமதிக்கப்படுவர்.
    தடகளம், நீச்சல் போட்டிகளுக்கு ஒரு பள்ளி, கல்லூரியில் இருந்து ஒரு போட்டிக்கு 2 மாணவ, மாணவிகள் மட்டும் அனுமதிக்கப்படுவர். ஒரு மாணவர் அதிகபட்சம் 2 போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
    போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களது பள்ளித் தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வரிடம் இருந்து ஆளறிச் சான்றிதழ் கண்டிப்பாக வாங்கி வர வேண்டும்.
    மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு, இளைஞர் நல அலுவலரை 04175-233169 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai