Enable Javscript for better performance
மாவட்ட விளையாட்டுப் போட்டி: செய்யாறு ஆசிரியர்கள் சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட விளையாட்டுப் போட்டி: செய்யாறு ஆசிரியர்கள் சிறப்பிடம்

    By DIN  |   Published on : 24th March 2018 02:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட அளவிலான அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் செய்யாறைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. இதில், குண்டு எறியும் போட்டியில் கலந்து கொண்ட செய்யாறு ஒன்றியம், பாப்பாந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் வி.சேட்டு வெற்றி பெற்று இரண்டாமிடம் பிடித்தார்.
    இதேபோல, வெம்பாக்கம் ஒன்றியம், சோழவரம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் என்.பாபு, வி.சேட்டு ஆகியோர் கபடி அணியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றனர்.
    இந்த நிலையில், விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற ஆசிரியர்களைப் பாராட்டி மாவட்ட விளையாட்டு
    அலுவலர் ஜெயக்குமாரி சான்றிதழ், பரிசு வழங்கினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai