Enable Javscript for better performance
378 மாற்றுத் திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    378 மாற்றுத் திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்

    By DIN  |   Published on : 24th March 2018 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 378 பேரிடம் மனுக்களைப் பெற்று, ஆட்சியர் குறைகளைக் கேட்டறிந்தார்.
    தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.
    அதன்படி, வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
    கூட்டத்துக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி முன்னிலை வகித்தார்.
    மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் எதிரே இருக்கையில் அமர்ந்திருந்த 378 மாற்றுத் திறனாளிகளிடமும் சென்று மனுக்களைப் பெற்று, குறைகளைக் கேட்டறிந்தார்.
    அப்போது, பலர் தங்களுக்கு ஏதாவது வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்குப் பதிலளித்த ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
    நலத் திட்ட உதவிகள் அளிப்பு: கூட்டத்தில், 3 பேருக்கு மூன்று சக்கர வண்டிகள், 3 பேருக்கு காதொலி கருவிகள்,
    3 பேருக்கு ஊன்றுகோல்கள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார். இதில், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai