Enable Javscript for better performance
கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    கல்லூரி நிர்வாகமும், புதுச்சேரி பெராஸ் அகாதெமியும் இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி தலைமை வகித்தார். கல்லூரிச் செயலரும், தாளாளருமான என்.குமார், பொருளாளர் கே.ராஜேந்திர குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    முகாமில், புதுச்சேரி டாடா மோட்டார்ஸ், மகேந்திரா மோட்டார்ஸ், சென்னை சேர்க்கான், கோவை சைன் போஸ்ட் ஆகிய 4 நிறுவனங்களின் வேலைவாய்ப்பு அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்துக்குத் தேவையான தகுதிகள் கொண்ட மாணவ, மாணவிகள் 99 பேரை தேர்வு செய்தனர்.
    இவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், அறக்கட்டளை உறுப்பினர் பி.என்.கே.ராஜேந்திரன், கல்வி புல முதன்மையர் அழ.உடையப்பன், முதல்வர் கே.ஆனந்தராஜ், தகவல் தொழில்நுட்ப மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai