Enable Javscript for better performance
கார் மரத்தில் மோதல்:ஓட்டுநர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே கார் மரத்தில் மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்தார். தம்பதி பலத்த காயமடைந்தனர்.
    வேலூர், காந்தி நகர், 3-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கோபால் (48). இவர், திருநெல்வேலியில் புதிதாக கார் வாங்கினார். இந்தக் காரில் வியாழக்கிழமை தனது மனைவி சரஸ்வதியுடன் (40) வேலூருக்குப் புறப்பட்டார்.
    வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த நடுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விநாயகராஜா (48) காரை ஓட்டி வந்தார். திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலை, கொளக்குடி அருகே வெள்ளிக்கிழமை வந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலையோர புளிய மரத்தில் கார் மோதியது.
    இந்த விபத்தில் கார் ஓட்டுநர் விநாயகராஜா அதே இடத்தில் இறந்தார். பலத்த காயமடைந்த கோபால், சரஸ்வதி ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து வெறையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai