Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து கருப்புக்கொடி கட்டி பாமகவினர் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து கருப்புக்கொடி கட்டி பாமகவினர் போராட்டம்

    By DIN  |   Published on : 31st March 2018 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தெருக்களிலும், வீடுகளிலும் கருப்புக்கொடி கட்டி பாமகவினர் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, ஆரணியை அடுத்த ஆதனூரில் பாமக சார்பில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி அந்தக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆர்ப்பாட்டத்துக்கு பேராசிரியர் கே.சிவா தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றியச் செயலர் மு.மெய்யழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    செங்கம்: இதேபோல, பாமக மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட செங்கம், பிஞ்சூர், சின்னபிஞ்சூர், அரட்டவாடி, புளியம்பட்டி, ஆண்டிப்பட்டி, அமர்நாதபுதூர், வடமாத்தூர், கடலாடி, காஞ்சி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மேற்கு மாவட்டச் செயலர் இரா.சுரேஷ் தலைமையில், அந்தக் கட்சியினர் தெருக்களிலும், வீடுகளிலும், கடைகளிலும் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
    மேலும், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து, பாமக அறிவித்துள்ளபடி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடைபெறும் என மேற்கு மாவட்டச் செயலர் இரா.சுரேஷ் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai