Enable Javscript for better performance
கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    புனித வெள்ளியை முன்னிட்டு, வந்தவாசி, சேத்துப்பட்டு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.
    இதையொட்டி, வந்தவாசி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற சிலுவைப் பாதை நிகழ்ச்சியின்போது, பங்குபேரவையினர், அருட்கன்னியர்கள் உள்ளிட்டோர் ஆலய வளாகத்தில் சிலுவை மரத்தை ஏந்திச் சென்றனர்.
    நிகழ்ச்சிக்கு ஆலய பங்குதந்தை டி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். உதவி பங்குதந்தை ஆரோக்கிய நிர்மல்ராஜ் மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    சேத்துப்பட்டு: சேத்துப்பட்டில் வரலாற்று சிறப்புமிக்க தூய லூர்து அன்னை தேவாலயத்தில் இருந்து வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள மாதா மலைக்கு ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஜெபமாலை பாடியபடி தவப்பயணம் மேற்கொண்டனர்.
    இதில், ஏசுவின் 14 நிலைப்பாடுகளை உணர்த்தும் வகையில், இளைஞர்கள் நடித்துக் காட்டினர். இதில், தூய லூர்து அன்னை ஆலய பங்குதந்தை விக்டர் இன்பராஜ் தலைமையில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், பங்குதந்தையர்கள், அருட்கன்னியர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள், பங்குமக்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai