Enable Javscript for better performance
கூட்டுறவுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி தீவிரம்  

    By DIN  |   Published on : 31st March 2018 09:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாக்குச் சீட்டுகள் அனைத்தும் திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்க அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு வருகின்றன.
    விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தப் பணியை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பா.ரேணுகாம்பாள் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    இந்த ஆய்வின்போது, மாவட்ட தேர்தல் அலுவலர் ஆ.மாதவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைப் பதிவாளர் கோ.யோகவிஷ்ணு, மாவட்ட கூட்டுறவு அச்சக கூட்டுறவு சார் பதிவாளர் மு.செந்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai