Enable Javscript for better performance
சித்த மருத்துவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆரணியில் மகாசித்தர் பரம்பரை சித்த மருத்துவர்கள் மூலிகை ஆராய்ச்சி சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    சங்கத் தலைவர் கே.காசி தலைமை வகித்தார். கூட்டத்தில், கடந்த 1982-ஆம் ஆண்டு வரை சித்த மருத்துவர்களுக்கு பரம்பரை சித்த வைத்தியர் என அரசு சார்பில் சான்று அளித்து வந்தனர். அதன்பிறகு சுமார் 36 ஆண்டுகாலமாக இந்தச் சான்று வழங்கப்படவில்லை.
    எனவே, சித்த மருத்துவர்களுக்கு பரம்பரை சித்த வைத்தியர் என சான்று வழங்கக் கோரி தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்புவது என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். கூட்டத்தில் சங்கச் செயலர் ஆர்.விஜயன், பொருளாளர் கே.உதயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai