Enable Javscript for better performance
திமுக சார்பில் 2,065 பேருக்கு நல உதவிகள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சேத்துப்பட்டை அடுத்த மட்டபிறையூர் கூட்டுச்சாலை அருகே திமுக சார்பில், இளைஞர் எழுச்சிநாள் பொதுக்கூட்டம், 2,065 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
    சேத்துப்பட்டு கிழக்கு, மேற்கு ஒன்றிய திமுக, இளைஞரணி சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு போளூர் தொகுதி எம்எல்ஏவும், ஒன்றியச் செயலருமான கே.வி.சேகரன் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றியச் செயலர் எழில்மாறன், நகரச் செயலர் முருகன், இளைஞரணி  அமைப்பாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியச் செயலர் பி.மனோகரன் வரவேற்றார்.
    சிறப்பு அழைப்பாளராக கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், மாவட்டச் செயலருமான எ.வ.வேலு எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், 2,065 பேருக்கு பல்வேறு நல உதவிகளை அவர் வழங்கினார்.
    மாவட்டச் செயலர் சிவானந்தம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராசேந்திரன், மாவட்ட துணைச் செயலர் பரமேஸ்வரிராஜ்குமார், மாவட்டப் பொருளாளர் பாண்டுரங்கன், எம்எல்ஏக்கள் அம்பேத்குமார், கிரி மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai