Enable Javscript for better performance
நாட்டின் வளர்ச்சியில் பொறியியல் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது: நடிகர் சமுத்திரக்கனி பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    நாட்டின் வளர்ச்சியில் பொறியியல் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது: நடிகர் சமுத்திரக்கனி பேச்சு

    By DIN  |   Published on : 31st March 2018 09:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாட்டின் வளர்ச்சியில் பொறியியல் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது என்று நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி கூறினார்.
    திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆப் என்ஜினீயரிங் கல்லூரியின் ஆண்டு விழா, கலை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றன. விழாவுக்கு, கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன் தலைமை வகித்தார். கல்லூரிப் பதிவாளர் ரா.சத்தியசீலன், கல்லூரி முதல்வர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார்.
    திரைப்பட இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 2017 - 18ஆவது கல்வியாண்டில் பல்வேறு பாடப் பிரிவுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகள், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகள், துறை வாரியாக அதிக தேர்ச்சி அளித்த பேராசிரியர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார்.
    தொடர்ந்து சமுத்திரகனி பேசியதாவது: போட்டிகள் நிறைந்த இன்றைய சமுதாயத்தில் வெற்றிபெற பொறியியல் கல்வி மிகவும் அவசியம். நாட்டின் வளர்ச்சியில் பொறியியல் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது.
    திரைத்துறையில் சவுண்டு என்ஜினீயரிங், கிராபிக்ஸ், அனிமேசன்ஸ், விஷுவல் கம்யூனிகேசன், அட்வர்டைசிங், மார்க்கெட்டிங் உள்ளிட்ட பிரிவுகள் சாதனையாளர்களை எதிர்நோக்கி உள்ளன என்றார்.
    தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai