Enable Javscript for better performance
பங்குனி உத்திரம்: அதிமா பகவானுக்கு சிறப்பு பூஜை- Dinamani

சுடச்சுட

    

    பங்குனி உத்திரத்தையொட்டி, செய்யாறை அடுத்த கூழமந்தல் நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் அமைந்துள்ள உத்திர நட்சத்திர அதிதேவதையான அதிமா பகவானுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
    காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் கூழமந்தல் கிராம ஏரிக்கரையில் நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் அசுவனி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திர அதிதேவதைகளின் கோயில்கள் அமைந்துள்ளன. மேலும், ராகு, கேது மற்றும் சனி பகவான் ஆகிய தலங்களும் அமையப்பெற்றுள்ளன.
    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, இந்தக் கோயிலில் அமைந்துள்ள உத்திர நட்சத்திர அதிதேவதையான அதிமா பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.
    முன்னதாக, நட்சத்திர விருட்ச விநாயகர், இதர அதிதேவதைகளுக்கு அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai