Enable Javscript for better performance
பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் பக்தர்கள் நேர்த்திக்கடன்- Dinamani

சுடச்சுட

    

    பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

    By DIN  |   Published on : 31st March 2018 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை செக்கு இழுத்தும், கொதிக்கும் எண்ணெயில் வடை சுட்டும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    திருவண்ணாமலையை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. காலையில் மூலவருக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    பின்னர், பக்தர் ஒருவர் தனது முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் பறந்து சென்று ஸ்ரீமுருகப்பெருமானுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
    தொடர்ந்து, முருகப்பெருமானுக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    சின்னகல்லப்பாடி கிராமத்தில்...: திருவண்ணாமலையை அடுத்த சின்னகல்லபாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றன. தொடர்ந்து, காலை 11 மணிக்கு பக்தர்களின் மார்பு மீது உரல் வைத்து அதில் மஞ்சள், அரிசி போட்டு இடித்தனர்.
    பின்னர், கொதிக்கும் எண்ணெயில் பக்தர்கள் வடை சுட்டு, சுவாமிக்கு படைத்தனர்.
    மேலும், அலகு குத்திய பக்தர்கள் செக்கு இழுத்தும், தேர் இழுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில், கோயில் தர்மகர்த்தா மணி, பூசாரி ராஜி சின்னதுரை உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai