Enable Javscript for better performance
பயிர் அறுவடைப் பரிசோதனைகள் மேற்கொள்ள பணி நியமன முகமைகள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    பயிர் அறுவடைப் பரிசோதனைகள் மேற்கொள்ள பணி நியமன முகமைகள் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 31st March 2018 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிர் அறுவடைப் பரிசோதனைகள் மேற்கொள்ள தகுதியான பணியாளர்களைக் கொண்ட பணி நியமன முகமைகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட வேளாண் துறை தெரிவித்தது.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயிர் அறுவடைப் பரிசோதனைகள் மேற்கொள்ளத் தகுதியான பணியாளர்கள் தாற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமன முகமைகள் (டப்ஹஸ்ரீங்ம்ங்ய்ற் அஞ்ங்ய்ஸ்ரீஹ்) மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.
    இந்தப் பணிக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள் பயிர் அறுவடைப் பரிசோதனை தளைகள் தேர்வுப் பணி, அறுவடைப் பணி, அதைச் சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பட்டப் படிப்பு, பட்டப் படிப்புடன் கணிணி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
    வேளாண், புள்ளியியல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடம் முற்றிலும் தொகுப்பூதிய அடிப்படையிலானது. தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும். இந்தப் பணி செய்ய விரும்புவோரும், தகுதியான பணி நியமன முகமைகள் பணியாளர்களை தேர்வு செய்து வழங்க தங்களது முகமையின் அடிப்படை விவரங்கள், அனுபவம், ஒப்பந்தப் பணியாளர்களை வழங்க சேவைக் கட்டணம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஏப்ரல் 2-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
    தேர்வு செய்யப்படும் முகமை உடனே ஒப்பந்தப் பணியாளர்களை தேர்வு செய்து வழங்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், ஒருங்கிணைந்த வேளாண் அலுவலக வளாகம், மருத்துவ கல்லூரிக் பின்புறம், திருவண்ணாமலை என்ற முகவரியில் அணுகலாம். விண்ணப்பங்களையும் இதே முகவரிக்கு அனுப்பலாம் என்று மாவட்ட வேளாண் துறை தெரிவித்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai