Enable Javscript for better performance
பைக்குகள் மோதல்: இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பலத்த காயமடைந்த இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
    காஞ்சிபுரத்தை அடுத்த திருப்பக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (30). இவர், கடந்த 23-ஆம் தேதி தனது பைக்கில் வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
    மாத்தூர் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜயகுமார், காஞ்சிபுரம் அரசு மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைகாக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் வெள்ளிக்கிழமை இறந்தார். இது குறித்து தூசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai