Enable Javscript for better performance
மலைக் கிராம மக்களுக்கு நீர் மேலாண்மைப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    செங்கம் அருகே மலைக் கிராம மக்களுக்கு நீர் மேலாண்மை குறித்து வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், ரீடு தொண்டு நிறுவனமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் காளியம்மாள்கோவிந்தராஜ் தலைமை வகித்தார். 
    ஊராட்சிச் செயலர் மருதமலை முன்னிலை வகித்தார். ரீடு தொண்டு நிறுவன இயக்குநர் ஏழுமலை வரவேற்றார்.
    சமூக ஆர்வலர்கள் செஞ்சி மோகன்குமார், ராமு ஆகியோர் கலந்து கொண்டு நீர் மேலாண்மை, குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்தும் முறைகள், நவீன முறையில் விவசாயம் செய்து தண்ணீரை சேமிப்பது குறித்து விளக்கிப் பேசினர். களப்பணியாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai