Enable Javscript for better performance
வந்தவாசி ரங்கநாதப் பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவத்தையொட்டி, வந்தவாசி கோமுட்டி குளத்தில் தீர்த்தவாரி உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இந்தக் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை தீர்த்தவாரி நடைபெற்றது.
    இதையொட்டி, உற்சவர் சுவாமி வீதியுலாவாக சக்கர தீர்த்தம் என்கிற கோமுட்டி குளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு சுவாமிக்கு நீராட்டு உத்ஸவம் நடைபெற்றது. விழாவில், பட்டர்கள் ஸ்ரீரங்கநாதன், சதீஷ், கோவிந்தன் மற்றும் உபயதாரர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai