Enable Javscript for better performance
வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சீனாவைச் சேர்ந்த செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனத்தின் வணிக விரோத கொள்கையைக் கண்டித்து, வியாபாரிகள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஆரணி அண்ணா சிலை அருகில் சிறு, குறு, பெரு வாணிபம் செய்வோர் நலச் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, ஆரணி தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    இதில், தமிழ்நாடு நுகர்பொருள் விநியோக சங்கத்தின் மாநிலத் தலைவர் பி .எம்.கணேஷ்ராம் தலைமை வகித்து, கண்டன உரையாற்றினார். 
    ஆரணி சிறு, குறு, பெரு வாணிபம் செய்வோர் நலச் சங்கத் தலைவர் ஏ.அருண்குமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவர் எல்.குமார், ஆரணி தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் வி.கே.ஷர்மா, வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஜி.விஸ்வநாதன், ஏ.எம்.முருகானந்தம், டி.ராமு, பி.செந்தில்குமார், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai