Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் அதிகாரம் பெற்ற அமைப்பாக இருக்க வேண்டும்: ஏ.சி.சண்முகம் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அதிகாரம் பெற்ற அமைப்பாக இருக்க வேண்டும்: ஏ.சி.சண்முகம் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 18th May 2018 01:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அதிகாரம் பெற்ற அமைப்பாக இருக்க வேண்டும் என்று ஆரணிக்கு வியாழக்கிழமை வந்திருந்த புதிய நீதிக் கட்சி நிறுவனர் 
    ஏ.சி.சண்முகம் வலியுறுத்தினார்.
    இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அதிகாரம் பெற்ற அமைப்பாக இருக்க வேண்டும். 
    இந்த வாரியம் எடுக்கும் முடிகளை கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளும் ஏற்க வேண்டும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது நிச்சயம். அவருடன் புதிய நீதிக்கட்சி இணைந்து செயல்படும் என்றார்.
    தொடர்ந்து, ஆரணி ஏ.சி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஜெ.சந்தியா, எஸ்.என்.லூஷிகா, எம்.தஸ்லிமாபர்வீன் ஆகிய மாணவிகளுக்கு ரொக்க பரிசு, நினைவுப்பரிசு ஆகியவற்றை ஏ.சி.சண்முகம் வழங்கினார்.
    மேலும், இந்த 3 மாணவிகளும் விரும்பினால் ஏ.சி.எஸ். குழும பொறியியல் கல்லூரியில் இலவச கல்வி அளிக்கப்படும். தொடர்ந்து 7 ஆண்டுகளாக ஏ.சி.எஸ். மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது என்றார். உடன், கல்லூரிச் செயலர் ஏ.சி.ரவி,  பள்ளிச் செயலர் ஏ.சி.பாபு ஆகியோர் இருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai